மாலபே, தலஹேன பிரதேசத்தில் நேற்று (9) ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சிக்கிய 58 கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கான புனர்வாழ்வு வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டிட நிர்மாணிப்பு பணிகளுக்காக கொள்ளுப்பிட்டி, ராஜகிரிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசங்களில் 180 கைதிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் மீண்டும் வட்டரெக்க சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, மாலபே, தலஹேன பகுதியில் சிக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும்,நேற்றைய தினம் ‘கோட்டா கோ கம பகுதியில் இடம்பெற்ற தாக்குதலை மேற்கொள்வதற்கு இந்தக் கைதிகள் பயன்படுத்தப்பட்டதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதுடன், அந்தக் குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது.
இதேவேளை சிறைச்சாலை பேருந்தின் மீது போராட்டகார்கள் நேற்று தாக்குதல் நடத்திய நிலையில், இந்த காணாமல் போன சம்பவம் நடந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அழைத்து வரப்பட்டதாக கூறப்படும் கைதிகள் சிலரை இளைஞர் பிடித்து தாக்குதல் நடத்தியினர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்குவதற்காக கைதிகளை அழைத்து வந்துள்ளதை என்பதை நிரூபிக்கும் வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது.
இவர்கள் வட்டர்காவில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த கைதிகள் மற்றும் அவர்கள் ஜெயிலர் ரத்நாயக்கவால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த விடயத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது.