கே.எஸ். சிவகுமாரன் மறைவு: வாழ்நாளில் கற்றதையும் பெற்றதையும் பதிவுசெய்த கலை, இலக்கியவாதி

Date:

புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரும் கே.எஸ்.சிவகுமாரன் நேற்று காலமானார்.

மட்டக்களப்பில் புளியந்தீவில் சிங்களவாடி என்ற ஊரைப்பிறப்பிடமாகக் கொண்டவர்.

இலங்கையிலும் பின்னர் ஊமானிலும் 1998 முதல் 2002 ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றினார் மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கியம், நாடகம், திரைப்படம், ஊடகங்கள், அறிவியல் செய்தித்திறனாய்வுகள், அரசியல் திறனாய்வுகள், இசை நடனம், ஓவியம், மொழிப்பெயர்ப்பு, சிறுகதை கவிதை பொன்ற பல துறைகளிலும் எழுதி ஒலி, ஒளிபரப்பி வந்த ஒரு பொக்கிஷமாவார்.

மேலும் இவர் இலங்பை வானொலியிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தார். இலங்கை வானொலி தமிழ் தேசிய வர்த்தக ஒலிபரப்புகளிலும், ஆங்கில சேவையிலும் 1960களில் பணியாற்றிய மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவராவார்.

30 தமிழ் நூல்களையும் 2ஆங்கில நூல்களையும் இரண்டு ஆங்கில மொழிக கலைக்களஞ்சியங்களையும் இவர் எழுதி வெளியிட்டள்ளார்.

இலங்கை வானொலி தமிழ் தேசிய வர்த்தக ஒலிபரப்புகளிலும் ஆங்கில சேவையிலும் 1960களில் பணியாற்றிய மூத்த ஒலிபரப்பாளரான கே.எஸ். சிவகுமாரனுக்கு சென்னையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் 2020 டிசம்பர் 2021 ஜனவரி காலப்பகுதியில் நடைபெற்ற 6ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவில் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்வும் பணியும்

ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியப்பணியாற்றுபவர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம்தான். தளும்பாத நிறைகுடமாக எம்மத்தியிலிருப்பவர் கே.எஸ். சிவகுமாரன்.

இதுவரையில் தமிழில் நாற்பதிற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும் ஆங்கிலத்தில் சில நூல்களையும் வரவாக்கிவிட்டு தொடர்ந்தும் அயராமல் ஆங்கில, தமிழ் இதழ்களில் எழுதிக்கொண்டிருப்பவர். முகநூல் அறிமுகமானதன் பின்னர் அதிலும் எழுதுகிறார்.

தங்கள் நூல்களைப்பற்றி ஆங்கில, தமிழ் ஊடகங்களில் சிற்றிதழ்களில் கே.எஸ்.எஸ். எழுதமாட்டாரா? என்று காத்திருக்கும் படைப்பிலக்கியவாதிகளும் எம்மத்தியிலிருக்கிறார்கள்.

சிவகுமாரன் தன்னை ஒரு இலக்கிய விமர்சகன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர். இன்றும் தான் ஒரு திறனாய்வாளன்தான் என்று அடக்கமாகச்சொல்லிக்கொள்ளும் இவர், சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியவர்.
ஆயினும் ஒரு விமர்சகராக, திறனாய்வாளராக, பத்தி எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத்தான் வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கிறார்.

இருமை, சிவகுமாரன் கதைகள்  ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரையில் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலான இவரது கதைகள் உளவியல் சார்ந்திருக்கும். கே.எஸ்.எஸ்., பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலப்பட்டதாரி.

தமது வாழ்நாளில் பெரும் பகுதியை இலக்கியத்திற்கும் ஊடகம் மற்றும் இதழியலுக்கும், மொழிபெயர்ப்பிற்கும் கல்வித்துறைக்கும் அர்ப்பணித்தவர். தன்னை எங்கும் எதிலும் முதனிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத அளவுக்கு அதிகமான தன்னடக்க இயல்புகொண்டவர்.

விமர்சகர்கள், விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகும் இயல்பினர் என்பதனாலோ என்னவோ, தம்மை ஒரு திறனாய்வாளர் என்று சொல்லிக்கொள்வதில் அமைதிகாண்பவர். எவரையும் தமது எழுத்துக்களினால் காயப்படுத்தத் தெரியாதவர்.

ஒருவரது குணம் அவரது இயல்புகளிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. அமைதியான சுபாவம், கலந்துரையாடல்களிலும் உரத்துப்பேச விரும்பாத இயல்பு மற்றவர்களின் கருத்துக்களை பொறுமையாக செவிமடுக்கும் குணம் முதலானவையே அவரது மிகச்சிறந்த பலம் என்று கருதுகின்றோம். அதனால்தான் இத்தனைகாலம் இவரால் இங்கு தாக்குப்பிடிக்க முடிகிறது.

இலங்கை வானொலி, த ஐலண்ட், வீரகேசரி, முதலான ஊடகங்களிலும் பணியாற்றியவர். டெயிலிநியூசில் இவரது பத்தி எழுத்துக்களை பார்க்கலாம். இலங்கை வங்கி உட்பட பல வர்த்தக ஸ்தாபனங்களிலும் இவர் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியிருக்கிறார்.

இலங்கை வானொலியின் தமிழ்வர்த்தகசேவையில் பகுதிநேர அறிவிப்பாளராகவும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் செய்திப் பிரிவில் துணை ஆசிரியராகவும் சேவையாற்றிய கே.எஸ். சிவகுமாரன் இலங்கையில் அமெரிக்கத் தூதரக தகவல் பிரிவிலும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். நவமணி இதழின் ஸ்தாபக ஆசிரியரும் இவரே.

கொழும்பில் மூன்று சர்வதேசப்பாடசாலைகளிலும் அமெரிக்கா, மாலைதீவு, ஓமான் ஆகிய நாடுகளிலுள்ள பாடசாலைகளிலும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. இலங்கை திரைப்பட தணிக்கை அதிகாரியாகவும் கடமையாற்றியவர். சிறுகதை, திறனாய்வு, பத்தி எழுத்துக்களில் மாத்திரம் கவனம்செலுத்தியவர் அல்ல. தரமான சினிமா பற்றிய பிரக்ஞையுடனும் இயங்குபவர்.

அசையும் படிமங்கள்,  சினிமா  ஒரு உலகவலம் ஆகிய இவரது நூல்கள் சினிமா பற்றியவை. இந்தியாவில் நடந்த பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபற்றியவர்.

இவர் இத்தனை அனுபவங்களுக்குப்பின்னரும், தாம் இன்னமும் இலக்கியத்தில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன் தான் என்று மிகுந்த கூச்சத்துடன் சொல்லிக்கொள்கிறார். இதுவும் இவரது தன்னடக்கத்திற்கு ஒரு அடையாளம்.

அவரது மறைவு இலங்கை மக்களுக்கு ஒர் பேரிழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவதோடு அவர்களது குடும்பத்தினருடன் அவர்களது கவலைகளை பகிர்ந்துகொள்கிறோம்.

மூலம்: இணையம்

Popular

More like this
Related

சாதாரண தர மாணவர்களின் விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்!

சாதாரண தரப் பரீட்சை 2023(2024)க்கான விடைத்தாள் பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும்...

முஜிபுர் ரஹ்மான் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி  வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக...

இந்தியாவின் முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு புனித மக்கா நோக்கி பயணம்!

இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு...

மது பாவனையை கட்டுப்படுத்தியதால் மோதல்கள் குறைந்தன: ஆய்வில் தகவல்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் போது மது அருந்துவதைக் கட்டுப்படுத்தியதன்...