பிரான்ஸ் பயண முகவர்கள் குழு இலங்கைக்கு….!

Date:

இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 80 பிரான்ஸ் பயண முகவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று (21)  இலங்கை வந்தடைந்தனர்.

கண்டி, பெந்தோட்டை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்குச் சென்று இந்தப் பிரதேசங்களில் உள்ள ஹோட்டல் அமைப்பை அவதானித்த பின்னர், இக்குழுவினர் பிரான்சிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க உள்ளனர்.

இந்த பயண முகவர்கள் குழு காலை 07.25 மணியளவில் பிரான்சின் பிராங்போர்ட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-501 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் குழுவை வரவேற்பதற்காக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சுற்றுலா ஹோட்டல்கள், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சேவை நிறுவனங்கள் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

Popular

More like this
Related

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...