மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்துகளை திருடி விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Date:

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து விற்பனை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையின் பின்னர், சம்பவம் தொடர்பாக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய நேற்று இரண்டு விசாரணைக் குழுக்கள் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.

சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மஹரகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகரவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி நேற்று சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வைத்தியசாலைக்கு நன்கொடையாளரால் வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்தை வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் 21,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்தபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நேற்று  கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் குறித்த ஊழியரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஒரு தொகை தடுப்பூசியும், ரூ. 4,25,290 பணமும் கைப்பற்றப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...