ஈஸ்டர் தாக்குதல் சர்ச்சை கருத்து : நீதிமன்றில் விளக்கமளிக்க மைத்திரிக்கு உத்தரவு!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கையிட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை உண்மையாக செய்தவர்கள் யார் என்பது தொடர்பில் தனக்குத் தெரியுமென, முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து சர்ச்சைக்குள்ளானது.

 குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, CID யினர் இது தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் வழங்குமாறு கடந்த சனிக்கிழமை அழைப்பு விடுத்த நிலையில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு...

வெலிகம மத்ரஸா ஒன்றில் தீப்பரவல்

வெலிகம  கல்பொக்க வீதியிலுள்ள  மத்ரஸா ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மாத்தறை மாநகரசபை...

காஸா சிறுவர் நிதியத்திற்கு அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் மே 31 வரை நீடிப்பு

காசாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்...

ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானம் !

ஐக்கிய மக்கள் சக்தி  இந்த ஆண்டு இரண்டு மே தின பேரணிகளை...