சில பகுதிகளில் மட்டும் மழை

Date:


சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதற்கமைய, இன்று (05) பி.ப. 12:08 மணியளவில் அஹுங்கல்ல, நெலுவ, யால ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...