லெபனானில் ஹமாஸின் முக்கிய தலைவர் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்!

Date:

லெபனானில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பொறியியலாளர் காலித் அஹ்மத் அல்-அஹ்மத் இன்று காலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்று கொண்டிருந்தபோது, வடக்கு லெபனானில் உள்ள சிடோனில்  மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தார்.

இவரது மரணம் தொடர்பில் ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

‘நமது வீரத் தியாகிக்காக இரங்கல் தெரிவிக்கும் வேளையில், எல்லாம் வல்ல இறைவனிடமும், பின்னர் நமது மக்களிடமும்,  நமது தேசத்திடமும்,எதிர்ப்பின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்று உறுதியளிக்கிறோம். தியாகிகளின் இரத்தம் விடுதலைக்கான பாதையை ஒளிரச் செய்யும் ஒரு கலங்கரை விளக்கமாகவே இருக்கும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 மாதங்களாக பலஸ்தீனிய குழுக்களுக்கு எதிராக லெபனானில் உள்ள ஹமாஸ் உறுப்பினர்களை இஸ்ரேலின் இராணுவம் அடிக்கடி குறிவைத்து வருகிறது.

இதனிடையே, அக்டோபர் 7, 2023-இல் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில், ஹமாஸ் லெபனானில் இருந்தும் ராக்கெட் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

Popular

More like this
Related

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...