ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது: பெற்றோலிய கூட்டுத்தாபனம்

Date:

அடுத்த இரண்டு மாத காலத்துக்கு நாட்டில்  எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவிக்கையில்,

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இரண்டு மாத காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது.

தற்போதைய சூழ்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதுள்ள 92 ஒக்டேன் பெற்றோலில் பெருமளவானவை போர் இடம்பெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையல்ல. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே ஆகும். ஒன்று மட்டும் ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றார்.

 

Popular

More like this
Related

 இலங்கை பைத்துல்மால் நிதியம்: பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் அறிவித்தல்!

இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் 2026 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களுக்கான (Scholarships)...

பல மாவட்டங்களில் இன்று அதிக வெப்பநிலை நிலவும்

நாட்டின் பல மாவட்டங்களில் இன்றைய தினம் (14) அவதானம் செலுத்த வேண்டிய...

புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில் தரம் 11 மாணவர்களுக்குப் பாராட்டு விழா!

புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில், தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சையில்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவித்தல்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்ட முறையில் நடைபெறுமென பரீட்சைகள்...