யட்டிநுவர பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் சடலமாக மீட்பு!

Date:

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக நிலந்த, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பேராதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யஹலதென்ன பகுதியில் உள்ள அவர்களது வீட்டில்  அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக நிலந்த (52) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி (44) மற்றும் மகள் (17) ஆகியோர் மரணித்த நிலையில் வீட்டின் அறையொன்றினுள் சடலங்களாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு வேளை முதல் இன்று அதிகாலை வரையான காலப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...