சுகாதார அமைச்சினால் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்று முதல் நாளை மறுதினம் வரை இடம்பெறவுள்ளது.
இதற்கமைய 14 மாவட்டங்களின் 74 சுகாதார அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்படும்.
பொலிசார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு இதற்கென பெறப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் டெங்கு அவதானம் அதிகமுள்ள பகுதிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
டெங்கு நுளம்பு பெரும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளது.
