வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஐக் கடந்துள்ளதுடன் 19 டெங்கு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஜூன் 08, 09 மற்றும் 10 ஆகிய மூன்று தினங்களில் நாடு தழுவிய ரீதியில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாகும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகுவதாகவும் சுகாதாரப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
