இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

Date:

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, இளம் பருவத்தினருக்கு வாகனங்களை ஒப்படைக்கும்போது பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர் .

சமீபத்திய விபத்துகளில் பெரும்பாலானவை இளைஞர்களை உள்ளடக்கியவை என்றும், அதிவேகமே இதற்கான முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார் .

மேலும், இளம் பருவத்தினருக்கு வாகனம் வழங்கும் எந்தவொரு பெற்றோரும் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் பிரச்சினையைச் சட்டங்களால் மட்டும் தீர்க்க முடியாது என்றும், பெற்றோர்கள் இவ்விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.வூட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சாட்சியத்தை வெளியிட தடை!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை...

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு கணக்குகளில்!

2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர்...

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்!

இன்று (31) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...