இன்று நள்ளிரவு முதல் பாண் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!

Date:

இன்று (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் எம். கே. ஜயவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் உயர்த்தியதைத் தொடர்ந்தே, பாணின் விலையை இவ்வாறு உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

அத்துடன், ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளையும் நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் நியாயமான முறையில் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...

ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில்,...