ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

Date:

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர அவர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

ஷானி அபேசேகர அவர்களை பிரதிப் பொலிஸ் மா அதிபராக தரமுயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு குறித்த உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கமைய ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர அவர்களை பிரதிப் பொலிஸ் மா அதிபராக தரமுயர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவரது பணிநீக்கக் காலம் முதல் இதுவரை இழக்கப்பட்ட அனைத்து நிலுவைச் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளையும் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஷானி அபேசேகர அவர்கள் கைது செய்யப்பட்டார்.

அவர் 11 மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஷானி அபேசேகர அவர்களை பிணையில் விடுவித்தது.

2024 ஆம் ஆண்டு அவர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதோடு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State...

வேளாண் தொழில் நுட்பம் மற்றும் நிலையான உணவு உற்பத்தியில் இலங்கை – கட்டார் கூட்டுறவு விரிவாக்கம்

வேளாண் தொழில்நுட்பம் (Agri-technology), காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி...

சவூதி மன்னரிடம் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டு வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு...