அடுத்த கட்டத்தை எட்டியது ‘மக்கா ஒப்பந்தம்’: சவூதியில் அமைகிறது நிரந்தர செயலகம்!

Date:

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியே ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் புதிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு ‘மக்கா பாதுகாப்பு கூட்டணி’ (Mecca Defence Alliance) என அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுள்ளன.

இஸ்தான்புல்லில் நடைபெற்ற மூத்த அதிகாரிகளின் உயர் மட்டச் சந்திப்பிற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

“இதற்கான நிரந்தரச் செயலகம் ரியாத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது பொதுச் செயலாளராக எங்களது பாகிஸ்தான் சகோதரர்களில் ஒருவர் நியமிக்கப்படுவார்” என இந்த ஆலோசனைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துருக்கியே வெளியுறவுத்துறை அமைச்சர் ஹாக்கன் ஃபிடான் தெரிவித்தார்.

மேலும், “பிற நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்தல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை போன்ற சர்வதேச கொள்கைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறிய ஃபிடான், பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டின் பங்கேற்புக்கும் இக்கூட்டணி திறந்தே இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி, ஆறு மாதங்களுக்கும் மேலாகப் போர் நீடித்து வரும் சூழலில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரம் தாக்குதல்களை மேற்கொண்ட சில மணிநேரங்களில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை துருக்கியே சென்றடைந்தனர். முன்னதாக, லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு இஷாக் தார் துருக்கியே வந்தடைந்தார்.

அமெரிக்கா – ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தராகச் செயல்படும் நான்கு நாடுகளின் குழுவில் எகிப்தும் இடம்பெற்றுள்ளதால், திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் எகிப்தும் பங்கேற்கக்கூடும் எனப் பாகிஸ்தான் அதிகாரிகள் முன்னர் சூசகமாகத் தெரிவித்திருந்தனர்.

இந்த நான்கு நாடுகள் குழு முன்னதாக ஆகஸ்ட் 5 அன்று ஜோர்டானின் அமானிலும், அதற்கு முன் ஜூன் மாதம் கெய்ரோவிலும் சந்தித்துப் பேசின.

எனினும், திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மூன்று நாடுகள் மட்டுமே முதன்மையாக கவனம் செலுத்தின.

கடந்த ஆகஸ்ட் 7 அன்று மக்காவில் பாக்கிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியே ஆகியவை கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ‘மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்புக்கான குழு’, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் மூன்றின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என்ற அரசியல் பிரகடனத்தைச் செயலாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

எனினும், இதன் கட்டமைப்பு எவ்வாறு இயங்கும், பரஸ்பர பாதுகாப்பு விதிமுறைகள் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

கூட்டணியை நடைமுறைப்படுத்துதல்:

  •  துணைப் பிரதமர் இஷாக் தார், ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப்.

  • வெளியுறவுத் துறை அமைச்சர் ஹாக்கன் ஃபிடான், பாதுகாப்பு அமைச்சர் யாஷர் குலர் மற்றும் படைப் தளபதி செல்சுக் பயரக்டரோக்லு.

  • வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவூத், பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் மற்றும் படைத் தளபதி பயாத் அல்-ருவைலி.

இச்சந்திப்பில் இராணுவ ஒருங்கிணைப்பு, கூட்டுப் பயிற்சிகள், கூட்டு உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பாக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் துருக்கியே அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இக்கூட்டணியை நேட்டோவின் (NATO) 5வது விதியுடன் சிலர் ஒப்பிட்டுப் பேசினாலும், நேட்டோவைக் போன்று இதற்கு ஒருங்கிணைந்த கட்டளை மையம், நிலையான ராணுவப் படைகள் அல்லது கூட்டு ராணுவ அமைப்புகள் எதுவுமில்லை எனச் சுட்டிக்காட்டி பல சுயாதீன ஆய்வாளர்கள் அந்த ஒப்பீட்டை மறுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை வழங்கும் மனிதாபிமான உதவிக்கு அமைச்சரவை அனுமதி!

வடக்கு நேபாளத்தின் ரகுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட கடுமையான...

தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மஹிந்த தேசப்பிரியவுடன் விசேட புத்திஜீவித்துவ கலந்துரையாடல்!

'நல்லிணக்கம் மற்றும் சமய நல்லிணக்கத்தில் சமகால நிலை' தற்போதைய போக்குகள் என்ற...

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கு ஆயுதங்களை வழங்கும் இந்தியா: சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில் தகவல்

-லத்தீப் பாரூக் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் இந்திய தனியார் நிறுவனங்கள்...