சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

Date:

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் வழிகாட்டலில் சவூதி ஒட்டகக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட 8-வது பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழா (Crown Prince Camel Festival) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 03, 2026 அன்று மிகக் கோலாகலமாகத் தொடங்கிய இத்திருவிழா, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று, இறுதிக் கட்டப் பந்தயங்களுடன் நிறைவுக்கு வந்தது.
இந்த ஆண்டின் போட்டிகளுக்காக 50 மில்லியன் சவூதி ரியால்களுக்கும் அதிகமான பரிசுத் தொகை ஒதுக்கப்பட்டிருந்தது.
2018-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இத்திருவிழா, இந்த ஆண்டின் போட்டிகளுடன் சேர்த்து மொத்தமாக 4,000 பந்தயங்கள் என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது.
சவூதி அரேபியா மட்டுமின்றி வளைகுடா நாடுகள், ஜோர்டான், எகிப்து, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஒட்டகங்களும், உரிமையாளர்களும் இதில் தீவிரமாகப் பங்கேற்றனர்.
சவூதி அரேபியாவின் ‘விஷன் 2030’ (Saudi Vision 2030) திட்டத்தின் கீழ், நாட்டின் தொன்மைமிக்க கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த பிரமாண்ட திருவிழா ஆண்டுதோறும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
உலகளாவிய ரீதியில் முதல் தடவையாக இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டன.
இந்த நிகழ்வை காண்பதற்காக சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் ஓ.எல். அஜ்வத் அவர்களும் சென்று அங்கு இந்தப் போட்டி நிகழ்ச்சி குறித்து கருத்துக்களை தெரிவித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
குறிப்பாக இந்த நிகழ்வில் இலங்கையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் மற்றும் காணொளி வடிவமைப்பாளரான முஹம்மது ஸைத் 4 வருடங்களாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Screenshot

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...