Tuesday, October 27, 2026

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் உள்ளிட்டோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள்!

1 min read · 3 reads

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் அடங்குவதாக நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.