Thursday, November 19, 2026

நான்காவது கல்விசார் கருத்தரங்கு இன்று கொழும்பில்..!

1 min read · 13 reads

சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சும், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நான்காவது கல்விசார் கருத்தரங்கு (The 4th Educational Symposium) இன்று புதன்கிழமை (18) மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கொழும்பு 07, டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் (Duncan White Auditorium) நடைபெறவுள்ளது.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சின் மாண்புமிகு அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் பின் அப்துல்லாஹ் அல் ஷெய்க் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

தூதுவர் யாஸிர் பின் அப்துர் ரஹ்மான் அல்ஹாஸிமியின் நேரடி மேற்பார்வையின் கீழ், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இக்கருத்தரங்கில் சவூதி அரேபியாவிலிருந்து வருகைதரும் முக்கிய பிரமுகர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள், அறபு மொழி அறிஞர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.