2026ஆம் ஆண்டுக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வருடாந்த வருமான இலக்கைத் தாண்டுவதற்கு அந்தத் திணைக்களம் சமத்துள்ளது.
இதன்படி, 2,402 பில்லியன் ரூபாய் வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 16ஆம் திகதி வரை 2,441.9 பில்லியன் ரூபாய் வருமானத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஈட்டியுள்ளது.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட வருடாந்த வருமான இலக்கையும் திணைக்களம் கடந்துள்ளது.
அத்துடன், 2025ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேலதிகமாக 491 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டுவதற்கும் திணைக்களம் சமத்துள்ளது.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 115 சதவீத வளர்ச்சியாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த முன்னேற்றமானது, வரி நிர்வாகத்தின் வலிமை, வரி வருமானத்தைச் சேகரிப்பதில் காணப்படும் வினைத்திறன் மற்றும் வரிச் சட்டங்கள், ஒழுங்குவிதிகளுக்கு இணங்கச் செயற்படுவதில் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள ஆர்வம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.