3,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிக லாஃப்ஸ் எரிவாயு கப்பலொன்று நாட்டுக்கு
3,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான சமையல் எரிவாயு (LP Gas) தொகையை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு (LAUGFS Gas) நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயு தொகை கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, வீட்டு மற்றும் வர்த்தக பாவனையாளர்களுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை கட்டம் கட்டமாக மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கப்பலிலிருந்து எரிவாயு தொகை இறக்கப்பட்டதன் பின்னர், சிலிண்டர்களை நிரப்பி விநியோகஸ்தர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்கள் ஊடாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்மூலம், பிரதேசம் வாரியாக லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு படிப்படியாக அதிகரிக்கும் எனவும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.