ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

Date:

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்கமைய வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரவி கருணாநாயக்கவிற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தராததன் காரணமாக கடந்த சனிக்கிழமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

எனினும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன் தனிப்பட்ட காரணங்களினால் ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறு தனது சட்டத்தரணிக்ள ஊடாக ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!

இன்று (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 450 கிராம்...

உலகில் அதிக பொது விடுமுறைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 3வது இடம்!

பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி,...

ஐந்து நாள் விடுமுறையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ.355 மில்லியன் வருமானம்!

கடந்த வாரம் நிலவிய ஐந்து நாள் விடுமுறை காலத்தில் இலங்கையின் அதிவேகப்...

அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

2024 செப்டம்பர் 21 அன்று தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்...