உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களின் பிரசன்னத்துடன் அரங்கேறிய யதுர்சனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்.
புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத் தலைவர்களுள் ஒருவரான சுந்தராம குருக்கள் அவர்களின் யதுர்சனா (ரேகா) குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக நிறைவு செய்த பரதநாட்டிய கலை அரங்கேற்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் [25] சிலாபம் நகரில் உள்ள சிலாபம் சுதசுன அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன பிரதம அதிதியாகவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல், புத்தளம் மாநகர சபை மேயர் பொறியிலாளர் ரின்ஷாத் அஹமட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் கற்பக விநாயகர் வேத ஆகம வித்தியாலய அதிபர், தமிழ்நாடு பிள்ளையார்பட்டி, விகாஸ்ரத்னா சிவஸ்ரீ K. பிச்சைக் குருக்கள் அவர்கள் உட்பட சர்வசமய தலைவர்களான கலாபூஷணம் சிவஸ்ரீ வெங்கட சுப்பிரமணிய குருக்கள் (வயலின் வித்துவான், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பீடாதிபதி) கலாநிதி சிவஸ்ரீ S. பத்மநாபன் சர்மா (பீடாதிபதி, இந்து கற்கைகள் பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் / அரங்காவலர், முன்னேஸ்வரம் தேவஸ்தானம்) புத்தியாகம சந்திரரத்ன தேரர் (இணைத்தலைவர், புத்தளம் மாவட்ட சர்வமதக்குழு / விகாராதிபதி, போதிமலு விஹாரை) கலாநிதி தொன் விமல்ஸ்ரீ ஜெயசூரிய (ஆயர், சிலாபம் மறைமாவட்டம்) அஷ்ஷேக் அப்துல் முஜீப் சாலிஹ் (இணைத்தலைவர், புத்தளம் மாவட்ட சர்வமதக்குழு) உட்பட ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
[படங்கள்..]



