ரிஷாத் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய கோரி ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக கண்டனப் போராட்டம் இன்று (05) இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது எமது தலைமையை விடுதலை செய்?, ரிஷாத்தை ஏன் கைது செய்தாய் காரணத்தை வெளிப்படுத்து, அரசே ரிஷாத்தின் கைது யாரை திருப்திப்படுத்த, ரிஷாத்தை விடுதலை செய் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு சமூக இடைவெளிகளைப் பேணி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

புனித நோன்பு காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை கைது செய்துள்ளமை கவலை அளிப்பதுடன், எந்தவித முன் அறிவித்தலும் இன்றி கைது செய்துள்ளமை மனவேதனை அளிப்பதுடன், உடனடியாக நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் விசாரணை மேற்கொண்டு விடுதலை செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுப்பதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...