யாழில் தலைமறைவாகி இருந்த 4 இந்தியர்கள் கண்டுபிடிப்பு

Date:

இந்தியாவில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகி இருந்த மற்றுமொரு குடும்பம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

34 வயதுடைய பெண் ஒருவர் அவரின் 9 மற்றும் 5 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் குறித்த பெண்ணின் 61 வயதுடைய தாய் ஆகியோரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இவர்கள், படகு ஊடாக மன்னார் பகுதிக்கு வந்து பின்னர் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர்கள் இன்று (13) பி.சி.ஆர் பரிசோனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...