வியாபார நிலையங்களுக்கு பூட்டு | பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

Date:

UPDATE ———

நாடு முழுவதிலும் இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தாக்கம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப்பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இந்த தடை தாக்கம் செலுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நாளாந்தம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் நடமாட்டங்களுக்கு தடைவிதிக்கப்படும்.

குறித்த நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் விமான நிலையம் செல்லவும், நோயாளர்களை இடமாற்றவும் அனுமதி வழங்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————–

இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மருந்தகங்கள் உட்பட் அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காலப்பகுதிக்குள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் ஊடாக வெளியே செல்வதற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவையாளர்கள் மாத்திரம் குறித்த காலப்பகுதிக்குள் பயணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...