வசந்த மற்றும் சிறிதம்ம தேரரைச் சந்தித்த மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகள்!

Date:

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் பேரவையின் அழைப்பாளர்  கல்வெவ சிறிதம்ம தேரரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க அனுமதியில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ‘சட்டவிரோத நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாக குற்றம்சாட்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை நியாயமற்ற மற்றும் அடக்குமுறையான சூழ்நிலை என ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர் இருவரும் கைதிகளின் உடல்நிலையை அவதானிக்கச் சென்றதாகவும், கல்வெவ சிறிதம்ம தேரரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்கு எதிராக பொதுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், அவர்களை 90 நாட்கள் தடுத்து வைத்திருப்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறல் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீட்டிக்கக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...