-
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 200ற்கும் மேற்பட்ட உயிர்களை பலிக் கொண்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களை…
-
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த…
-
நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை
நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (20) பிற்பகல் 3:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை முழுவதற்கும் செல்லுபடியாகும்.…
-
புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம் திகதி வரையிலான எட்டு நாட்களில், இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் மொத்தம்…
-
புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். பப்புவா நியூ கினியா சுதந்திர நாட்டின் உயர்ஸ்தானிகராக வின்சென்ட் சுமேல் (Vincent Sumale) (புதுடில்லியை…
-
அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களின் விபரங்களை, அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுள்ளது. இது தொடர்பில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான்…
-
மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்
மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (21) முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டமானது,…
-
ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை: பதிலடியை தொடங்கிய ஈரான்!
தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா கடற்படை இடைமறித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நிறுத்தும்படி விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்குப் பதிலளிக்கத் தவறியதால், டூஸ்கா (TOUSKA) என்ற ஈரானிய கப்பலை அமெரிக்கக் கடற்படை கைப்பற்றியதாக…
-
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்-சஜித் சந்திப்பு.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (19) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய நடைமுறை ரீதியான வாய்ப்புகளை திறப்பது தொடர்பில் இந்த சந்திப்பில்…
-
இன்று முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள், இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக…









