இலங்கை மற்றும் சீன வங்கிகளுக்கிடையில் உடன்படிக்கை

Date:

இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் இரு நாடுகளினதும் இருபுடை வர்த்தகத்தினையும் பொருளாதார அபிவிருத்திக்கான நேரடி முதலீடுகளையும் மேம்படுத்தும் நோக்குடனும் இரு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் ஏனைய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்காகவும் இருபுடை நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையொன்றினைச் செய்துகொண்டன.

சீன மக்கள் குடியரசு இலங்கையின் மிகப்பெரிய இறக்குமதி மூலமாக தொடர்ந்தும் இருந்துவருகின்றது. 2020 இல் சீனாவிலிருந்தான இறக்குமதிகள் ஐ.அ.டொலர் 3.6 பில்லியனாக விளங்கின. (இலங்கையின் இறக்குமதிகளில் 22.3 சதவீதம்).

இப்பரஸ்பர பரிமாற்றல் உடன்படிக்கைக்கு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் விதந்துரைப்புடன் அமைச்சரவை ஒப்புதலளித்திருக்கின்றது. இரு மத்திய வங்கிகளினதும் ஆளுநர்களான, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி லக்ஷ்மன் மற்றும் சீன மக்கள் வங்கியின் ஆளுநர் முனைவர். ஜி காங் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கின்றனர்.

இவ்வுடன்படிககையின் கீழ், இலங்கை மத்திய வங்கி சீன யுவான் 10 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) தொகை கொண்ட பரஸ்பர பரிமாற்றல் வசதியைப் பெற தகைமை பெறுகின்றது. இவ்வுடன்படிக்கையானது மூன்று (3) ஆண்டு காலப்பகுதிக்குச் செல்லுபடியாகும்.

Popular

More like this
Related

முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...

ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில்,...