தென்மேற்குப் பகுதியில் நிலவும் கடும் மழை தற்காலிகமாக குறையும்!

Date:

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை இன்றிலிருந்து (04) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...