பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

Date:

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக அம்பாந்தோட்டை வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45-50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக அம்பாந்தோட்டை வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து உலக வங்கியுடன் கலந்துரையாடல்

2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி...

சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக்...

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...