அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற மாநில செனட் சபைக்கான (US Senate) தேர்தலில் (Democratic Primary) ஜனநாயகக் கட்சியின் முற்போக்குவாத வேட்பாளரான டாக்டர் அப்துல் எல்-சயீத் (Dr. Abdul El-Sayed) இஸ்ரேலிய ஆதரவாளரான ஹேலி ஸ்டீவன்ஸை வீழ்த்தி வரலாற்று ரீதியான வெற்றி பெற்றுள்ளார்.
தனது வெற்றி குறித்துப் பேசிய அப்துல் எல்-சயீத்:
“நாங்கள் ஒரு மிகப்பெரிய அரசியல் இயந்திரத்தை எதிர்கொண்டு வென்றுள்ளோம். 7 கோடி டாலர் ($70 million) வெளி நிதிப் பிரச்சாரத்தை வீழ்த்துவது சாத்தியமில்லை என்று கருதப்பட்டது. ஆனால், அவர்களின் பண பலத்தை விடவும் எங்களது மக்கள் தொகையின் ஒன்றிணைந்த சக்தியே பெரியது என்பதை நாம் நிரூபித்துக் காட்டியுள்ளோம்.”
ஹேலி ஸ்டீவன்ஸின் கருத்துகள்
செவ்வாய்க்கிழமை இரவு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த போது, நள்ளிரவைத் தாண்டி ஆதரவாளர்களிடையே பேசிய ஹேலி ஸ்டீவன்ஸ், “நாம் சிறிது நேரம் உறங்க வேண்டும் அல்லது காபி குடித்துவிட்டு அடுத்தகட்டத்திற்குத் தயாராக வேண்டும்” எனக் கூறினார்.
மேலும், குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் எம்பி மைக் ராஜர்ஸை (Mike Rogers) எதிர்கொள்வது குறித்துப் பேசிய அவர்:
“டொனால்ட் டிரம்பின் அபத்தமான திட்டங்களுக்கு மைக் ராஜர்ஸ் தொடர்ந்து ஒப்புதல் அளிக்க, அமெரிக்க செனட் சபையை குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க அவர்கள் விரும்புகிறார்கள். நாம் தயாராகி, மைக் ராஜர்ஸுக்கு நமது உண்மையான பலத்தைக் காட்ட வேண்டும்.”
நவம்பரில் நடைபெறவுள்ள முக்கிய மோதல்
வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் (General Election) அப்துல் எல்-சயீத், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மைக் ராஜர்ஸை எதிர்கொள்வார். அமெரிக்க மேலவையின் பெரும்பான்மை கட்டுப்பாட்டைத் தீர்மானிப்பதில் இத்தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். மிச்சிகன் மாநில மேலவை தொகுதியைத் தக்கவைத்துக்கொள்வது ஜனநாயகக் கட்சிக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
அப்துல் எல்-சயீதின் வெற்றியைக் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள மைக் ராஜர்ஸ், எல்-சயீத் சாதாரண தாராளவாதி (Liberal) மட்டும் அல்ல, அவர் ஒரு தீவிரவாதப் போக்குடையவர் (Extremist) என்று விமர்சித்துள்ளார்.
