இதன்படி, புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் அதிகபட்சமாக 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதேவேளை, குளியாப்பிட்டிய பகுதியில் 193 மில்லிமீற்றரும், இலுப்பைக்கடவை பகுதியில் 187.5 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, மத்திய மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ சூறாவளி தொடர்ந்து வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் தாக்கம் இலங்கைக்கு மறைமுகமாக ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டின் வடக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, பொதுமக்கள் வானிலை தொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.