Monday, October 26, 2026

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி நௌபர் மௌலவிக்கு மேலும் 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!

1 min read · 10 reads

2018ஆம் ஆண்டு புத்தளம், வண்ணாத்தவில்லு, லக்டோவத்த பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்து வைத்திருந்த குற்றச்சாட்டில், நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு தலா 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டுகளை இருவரும் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நௌபர் மௌலவிக்கு, கடந்த செப்டம்பர் 2026 இல் ஏற்கனவே 220 ஆண்டுகள் கடின சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.